Friday, February 26, 2010
பயர்பாக்ஸில் திறக்க மறுக்கும் வெப்சைட் தளங்கள்
நீங்கள் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்து பவராக இருந்தால், நிச்சயம் சில இணைய தளங்களுடன் இந்த பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். ஏனென்றால் சில இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
அத்தகைய தளங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இயங்காது. எனவே, அந்த தளங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து, அத்தளங்களில் கொடுத்துள்ள தொடர்பு முகவரிக்கு இந்த பிரச்னை குறித்து இமெயில் அனுப்புங்கள். அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரில், டூல்பாரில் ஹெல்ப் (Help) பட்டனை அழுத்தவும். அதன்பின் Report Broken Website என்பதில் கிளிக் செய்திடவும். உடைந்த(!) இணைய தளங்களில் சில வகைகள் இருக்கும். அவற்றில் சில குறித்து உங்களுக்கு இங்கு தருகிறேன்.
1. Browser Not Supported
இத்தகைய தளங்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. ஏனென்றால் பயர்பாக்ஸ் பிரவுசர் இப்போது ஒரு முதன்மை பிரவுசராக நமக்கு கிடைத்து வருகிறது. இருப்பினும் Report பட்டனை அழுத்தி முன்பு கூறியபடி ரிப்போர்ட் செயல்படவும்.
2. Plug in Not shown
இதனைத்தான் நான் முழுமையாக வெறுக்கிறேன். பயர்பாக்ஸில் உள்ள ப்ளக் இன் பைண்டர் பொதுவாகவே சரியான ப்ளக் இன் பார்த்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். இருப்பினும் சிலவற்றை அதனால் பெற்று இன்ஸ்டால் செய்திட முடியாது. இதில் அதிகம் தொல்லை கொடுப்பது விண்டோஸ் மீடியா பிளேயர் 11 க்கான ப்ளக் இன் தான். எனவே இந்த செய்தி கிடைத்தால் அதற்குத்தானா என்று பார்த்து பெற்று இன்ஸ்டால் செய்திடவும்.
3. Other content missing
இது பொதுவாக ரிப்போர்ட் செய்யப்பட வேண்டிய ஒன்று. வெப்சைட் ஒன்றில் ஏதேனும் மெனு காட்டப்பட்டு அவை காலியாக இருந்தால் இந்த செய்தி கிடைக்கும். ரிப்போர்ட் பட்டன் அழுத்தி மேலே கூறியபடி தகவல் தர வேண்டியதுதான்.
4. Can’t Log in
உங்களுடைய அலுவலக இன்ட்ரா நெட் நெட்வொர்க்கினை, வீட்டிலிருந்த படி தொடர்பு கொள்ள முடிந்தால் இந்த தகவல் தரப்படலாம். பாஸ்வேர்ட் மறத்தல், தவறாக டைப் செய்தல் போன்ற தவற்றை நீங்கள் செய்திடவில்லை என்றால், மேலே சொன்னபடி ரிப்போர்ட் செய்திட வேண்டியது தான். மேலே சொன்னவைதான் சிக்கலான பிரச்னைகள். மற்றவை எல்லாம் சாதாரணமானவையே.
No Response to "பயர்பாக்ஸில் திறக்க மறுக்கும் வெப்சைட் தளங்கள்"
Leave A Reply