Thursday, November 25, 2010

கணனி 101 RUN கட்டளைகள்.

இவை உங்கள் கணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான கட்டளைகள் ஆகும். இவற்றை ஆங்கிலத்தில் run commands என்று அழைப்பார்கள். இவற்றை உங்கள் கணனியில் run மெனுவில் இட்டால் அவற்றுக்கான கட்டளைகள் கிடைக்கும்.

Accessibility Controls
access.cpl

Add Hardware Wizard
hdwwiz.cpl

Add/Remove Programs
appwiz.cpl

Administrative Tools
control.exe admintools

Automatic Updates
wuaucpl.cpl

Bluetooth Transfer Wizard
fsquirt

Calculator
calc

Certificate Manager
certmgr.msc

Character Map
charmap

Check Disk Utility
chkdsk

Clipboard Viewer
clipbrd

Command Prompt
cmd

Component Services
dcomcnfg

Computer Management
compmgmt.msc

Date and Time Properties
timedate.cpl

DDE Shares
ddeshare

Device Manager
devmgmt.msc

Direct X Control Panel (if installed)*
directx.cpl

Direct X Troubleshooter
dxdiag

Disk Cleanup Utility
cleanmgr

Disk Defragment
dfrg.msc

Disk Management
diskmgmt.msc

Disk Partition Manager
diskpart

Display Properties
control.exe desktop

Display Properties
desk.cpl

Display Properties (w/Appearance Tab Preselected)
control.exe color

Dr. Watson System Troubleshooting Utility
drwtsn32

Driver Verifier Utility
verifier

Event Viewer
eventvwr.msc

File Signature Verification Tool
sigverif

Findfast
findfast.cpl

Folders Properties
control.exe folders

Fonts
control.exe fonts

Fonts Folder
fonts

Free Cell Card Game
freecell

Game Controllers
joy.cpl

Group Policy Editor (XP Prof)
gpedit.msc

Hearts Card Game
mshearts

Iexpress Wizard
iexpress

Indexing Service
ciadv.msc

Internet Properties
inetcpl.cpl

Java Control Panel (if installed)
jpicpl32.cpl

Java Control Panel (if installed)
javaws

Keyboard Properties
control.exe keyboard

Local Security Settings
secpol.msc

Local Users and Groups
lusrmgr.msc

Logs You Out Of Windows
logoff

Mcft Chat
winchat

Minesweeper Game
winmine

Mouse Properties
control.exe mouse

Mouse Properties
main.cpl

Network Connections
control.exe netconnections

Network Connections
ncpa.cpl

Network Setup Wizard
netsetup.cpl

Nview Desktop Manager (if installed)
nvtuicpl.cpl

Object Packager
packager

ODBC Data Source Administrator
odbccp32.cpl

On Screen Keyboard
osk

Opens AC3 Filter (if installed)
ac3filter.cpl

Password Properties
password.cpl

Performance Monitor
perfmon.msc

Performance Monitor
perfmon

Phone and Modem Options
telephon.cpl

Power Configuration
powercfg.cpl

Printers and Faxes
control.exe printers

Printers Folder
printers

Private Character Editor
eudcedit

Quicktime (If Installed)
QuickTime.cpl

Regional Settings
intl.cpl

Registry Editor
regedit

Registry Editor
regedit32

Removable Storage
ntmsmgr.msc

Removable Storage Operator Requests
ntmsoprq.msc

Resultant Set of Policy
rsop.msc

Resultant Set of Policy (XP Prof)
rsop.msc

Scanners and Cameras
sticpl.cpl

Scheduled Tasks
control.exe schedtasks

Security Center
wscui.cpl

Services
services.msc

Shared Folders
fsmgmt.msc

Shuts Down Windows
shutdown

Sounds and Audio
mmsys.cpl

Spider Solitare Card Game
spider

SQL Client Configuration
cliconfg

System Configuration Editor
sysedit

System Configuration Utility
msconfig

System File Checker Utility
sfc

System Properties
sysdm.cpl

Task Manager
taskmgr

Telnet Client
telnet

User Account Management
nusrmgr.cpl

Utility Manager
utilman

Windows Firewall
firewall.cpl

Windows Magnifier
magnify

Windows Management Infrastructure
wmimgmt.msc

Windows System Security Tool
syskey

Windows Update Launches
wupdmgr

Windows XP Tour Wizard
tourstart

Wordpad
write

பிராசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை.

கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.
1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.

1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.

1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.

1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.

1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.

1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.

1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.

2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.

2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.

2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.

2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.

2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.

2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.

2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.

2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.

மெளஸ்

1968ல் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபார்ட் பல்கலைகழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மௌஸ் சென்ற வருடம் தன் நாற்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடியது.நாம் தினமும் கையில் வைத்துக்கொண்டு கணினி எனும் இயந்திரத்தை ஆட்டிப் படைக்கின்றோமே, அந்த மௌஸ்ஸைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மௌஸ் இருந்ததா என்ன?

ஆமாம். டக்லஸ் எங்கெல்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை சுலபமாக்குவதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் மௌஸ் மரத்தால் ஆனது. ஒரு பெரிய செவ்வகத்தைப் போல இருக்கும்! டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரு டெமோ மூலம் தன் மௌஸை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் டக்லஸ். 'டெமோக்களின் அன்னை', அதாவது 'Mother of All Demos' என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.சி என்று அழைக்கப்படும் Augmentation Research Centerல் வேலை பார்த்தவர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், அதிக பெயரும் புகழும் பெற்றது என்னவோ டக்லஸ்தான். இன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் மௌஸ்களைப் போல் வண்ண வண்ண பட்டன்கள் எல்லாம் அதில் கிடையாது. ஒரேயொரு பட்டன்தான். நிறைய சக்கரங்கள் பொருத்திய மரப்பெட்டி! ஆனால், அன்று அது ஏற்படுத்திய பரபரப்பு அளவில்லாதது. கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று, வரலாற்றை நினைவு கூறும் விதமாக, மௌஸின் நாற்பதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, அதே ஸ்டான்ஃபார்ட் பல்கலைக்கழகத்தில்.

அது சரி, அது என்ன பெயர் "மௌஸ்"? டக்லஸ் ஒரு பேட்டியில் சொல்கிறார். "முதல் மாநாட்டின் சமயம், எங்கள் கையில் அந்த புது கேட்ஜெட் இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஒரு சிறிய மரக்கட்டை போல் இருக்கும். அதன் நுனியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. மாநாட்டில் இருந்த யாரோ ஒருவர் அதைப் பார்த்து பயந்துவிட்டு 'எலி.. எலி' என்று கத்தினார் - கயிற்றை வால் என்று நினைத்துக் கொண்டு! அப்பொழுது வந்த பெயர்தான் மௌஸ்! அன்றிலிருந்து நாங்களும் மௌஸ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்." சில வருடங்களுக்குப் பிறகு, பில் இங்கிலிஷ் 'Computer Aided Display control' என்ற அவர்தம் புத்தகத்தில் மௌஸ் என்று பெயர் சூட்டுகின்றார்.

அந்த மரப்பெட்டி மெல்ல மெல்ல அழகாக மாறியது. முதல் மாற்றம் வந்தது மௌஸின் சக்கரத்தில்தான். அனைத்து சக்கரங்களையும் அகற்றி விட்டு, எல்லா திசைகளிலும் நகரக் கூடிய ஒரு பந்தை பொருத்தினார்கள். அதன் பிறகு ஆப்டிகல் மௌஸ் வர ஆரம்பித்தது. முதலில், டையோடுகளை பயன்படுத்தினார்கள். தொழில்நுட்பம் வளர வளர சென்சர்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகளும், லேசர் கதிர்களும் உபயோகத்தில் இருக்கின்றன.

இன்று மௌஸ் எவ்வளவு தேர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே. ஒரே ஒரு பட்டனில் ஆரம்பித்தது, இன்று நான்கைந்து பட்டன்கள் வரை வளர்ந்து நிற்கின்றது! இதற்கெல்லாம் நடுவில் 'ஆப்பிள்' கம்பெனி, 'நானும் புதிதாக செய்கிறேன்' என்ற பெயரில் 'மைட்டி மௌஸ்' என்றொன்றை விற்கிறது. மற்ற மௌஸ்களைப் போல, வயர்லெஸ் வடிவத்தில் இதுவும் கிடைக்கின்றது. 'வால் வெட்டப்பட்ட எலி' என்று டக்லஸ் விளக்கம் தருவாரோ!!

அது சரி, டக்லஸ் இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்? 'பூட்ஸ்ட்ராப் இன்ஸ்டிட்யூட்' என்றொன்றை 1988ல் ஆரம்பித்தார். பிறகு அது 'டக் எங்கெல்பர்ட் இன்ஸ்டிட்யூட்' என பெயர் மாற்றப்பட்டது. டக்லஸின் 'கலெக்டிவ் ஐக்யூ' எண்ணங்களின் மூலம் கணிப்பொறி துறையில் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. கலெக்டிவ் ஐக்யூ என்றால் "கூட்டாக வேலை பார்ப்பது" என்று அர்த்தமாம்.

டக்லஸ் இன்னும் கலிஃபோர்னியாவில்தான் இருக்கிறார். எண்பத்தி மூன்று வயதிலும் துடிப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

10 வழிமுறைகள்

கம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.
பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள். விளைவு? ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.

2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.

3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.



4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.

5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.

6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.

7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம். கீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது. எப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.

8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும். ட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும். இனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரண மாக அதன் வெளிப்புறத்தில் துடைத் தால் போதும்.

9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.

10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்.

வேர்ட்

எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் தொகுப்பினைக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும், அதன் பல்வேறு சுருக்க வழிகளைப் பயன்படுத்தி விரைவாகப் பணிகளை முடிக்கின்றனர். ஆனால் இத்தொகுப்பு வழங்கும் பல வழிகள் இதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கும் தெரியாததாகவே உள்ளது. சிலர் இது போன்ற புதிரான வழிகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த சில வழிகள் குறித்து அறியாமல் அல்லது தெரிந்தும் அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பார்கள். அவற்றில் சில வழிகள் குறித்து இங்கு காணலாம்.
1. பைண்ட் அண்ட் ரீபிளேஸ்: Find and Replace
என்பது வேர்ட் தொகுப்பில் சில சொற்களை மொத்தமாக எடிட் செய்வது மட்டுமின்றி, ஒரு டாகுமெண்ட்டில் இவற்றின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது. சொற்கள் மட்டுமின்றி பார்மட்டிங், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஏன் காலியான ஸ்பேஸ் அடையாளங்கள் ஆகியவற்றை எடிட் செய்திடவும் உதவுகிறது. இந்த Find and Replace டயலாக் பாக்ஸ் வேண்டுமென்றால் மெனு செல்லாமல் கீ போர்டிலேயே அதற்கான ஷார்ட் கட் உள்ளது. Ctrl+H A�x F5+Alt+P அழுத்துங்கள்.
ஸ்பேஸ் கேரக்டரை இதில் எப்படி எடிட் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா? அதற்கான சந்தர்ப்பம் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுகிறதா? சில வேளைகளில் இதனையும் எடிட் செய்திட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக ஒருவர் ஒரு வாக்கியம் முற்றுப் பெற்றவுடன் அடுத்த வாக்கியம் முன் இரு ஸ்பேஸ் விட்டு தொடங்குவார். இது பழைய காலத்தில் டைப் ரைட்டர் வகை பார்மட்டிங். இப்போது ஒரு சிலர் இந்த பார்மட் வழியைக் கடைப்பிடித்தாலும் பலர் ஒரு ஸ்பேஸ் விட்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் இந்த Find and Replace விண்டோ மூலம் Find What கட்டத்தில் இரு ஸ்பேஸ் இடைவெளியினை முதலில் ஏற்படுத்தி பின் Replace With கட்டத்தில் ஒரு ஸ்பேஸ் இடைவெளியை ஏற்படுத்தி அமைக்கலாம்.



தேவையற்ற பாரா இடைவெளிகள், டேப் இடைவெளிகள், நீங்களாக அமைத்த லைன் இடைவெளிகள் ஆகிய ஸ்பெஷல் கேரக்டர்களை எப்படி நீக்குவது? Find and Replace டயலாக் பாக்ஸில் More என்பதில் கிளிக் செய்திடுங்கள். இந்த கட்டம் விரியும் போது Special என்பதில் கிளிக் செய்யவும். இங்கு எந்த ஸ்பெஷல் கேரக்டர் எடிட் செய்யப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இந்த கேரக்டர் இருக்கும் இடத்தில் வேறு எதனையும் அமைக்கப் போவதில்லை. எனவே Replace With என்பதைக் கிளிக் செய்து அங்கு Delete என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Find Next என்பதில் கிளிக் செய்து அடுத்த எடிட்டிங் வேலையைத் தொடரலாம். இப்படி ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து எடிட் செய்து தேவையற்ற ஸ்பெஷல் கேரக்டர்களை நீக்கலாம்.

2.பாரா இடைவெளி அமைத்தல்: வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா மார்க்கர்களை அமைக்க ஸ்பேஸ் பார் அல்லது டேப் கீயினை அழுத்தி அமைக்கிறீர்களா? தேவையே இல்லை. வேர்டில் கிடைக்கும் ரூலர் இந்த வசதிகளை அளிக்கிறது. (உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் ரூலர் தெரியவில்லையா? வியூ சென்று ரூலர் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அப்போதும் தெரியவில்லையா? உங்கள் வேர்ட் டாகுமெண்ட் வியூ மெனுவில் பிரிண்ட் லே அவுட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது மேலாகவும் இடது பக்கமும் ரூலர்கள் காட்டப்படும். ரூலரின் இடது பக்க ஓரத்தில் இரண்டு முக்கோணங்கள் ஒரு சிறிய கட்டத்தின் மீது அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இவை மூன்று சிறிய தனி ஐகான்களாகும். இவற்றைப் பயன்படுத்தி பாரா இடைவெளியை அமைக்கலாம். மேலே உள்ள சிறிய முக்கோணம் ஒவ்வொரு பாராவின் முதல் வரிக்கான இடைவெளியை அமைக்கிறது. கீழே உள்ள முக்கோணம் பாராவில் உள்ள மற்ற வரிகள் ஒவ்வொன்றிற்கும் தனி இடைவெளியை அமைக்க உதவுகிறது. கீழே இருக்கும் சிறிய பாக்ஸ் பாரா முழுவதையும் எப்படி அமைக்க வேண்டும் என்பதில் உதவுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட முதல் வரி இடைவெளி மற்றும் பிற வரிகளின் அமைக்கப்பட்ட இடைவெளியினை அப்படியே வைத்துக் கொள்கிறது. இதே ரூலரின் வலது மேல் ஓரத்தில் ஒரே ஒரு முக்கோணம் இருப்பதனைக் காணலாம். இது வலது பக்கம் இன்டென்ட் அமைக்க உதவுகிறது.

3.ஆட்டோ கரெக்ட்: பொதுவான சிறிய டெக்ஸ்ட்டை வேர்ட் டாகுமெண்ட்டில் இணைக்கும் வசதியே ஆட்டோ கரெக்ட். இதன் அடிப்படை வேலை ஆங்கிலச் சொற்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அமைப்பதுதான். எடுத்துக் காட்டாக ‘and’ பதிலாக ‘adn’ என டைப் செய்தால் அது ‘and’ எனத் திருத்தப்படும். இப்படியே பல சொற்கள் ஏற்கனவே ஆட்டோ கரெக்ட் பட்டியலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதனைப் பயன்படுத்தி சிறிய டெக்ஸ்ட்களையும் ஓரிரு கீ அழுத்தலில் அமைக்கும்படி செட் செய்திடலாம்.
AutoText க்குப் பதிலாக Auto Correct பயன்படுத்தினால் என்டர் அல்லது எப்3 அழுத்தத் தேவையில்லை. வேர்ட் தொகுப்பு சொற்பிழையினைத் தானாகத் திருத்தும். மேலும் நீங்களாக ஒரு டெக்ஸ்ட்டை அமைத்து இயக்க இரண்டு கீகளை அழுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக உங்கள் இமெயில் முகவரியினை வேர்ட் டாகுமெண்ட்களில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் அதனை செட் செய்திடலாம். இதற்கு Tools, AutoCorrect Options (or Tools, AutoCorrect உங்களின் வேர்ட் பதிப்பைப் பொறுத்து) எனச் செல்லவும். இங்கு ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Replace text �இல் zz என அமைக்கவும். பின் With பீல்டில் உங்களுடைய இமெயில் முகவரியினை அமைக்கவும். அதன் பின் Add என்பதில் கிளிக் செய்திடவும். இனி எப்போது zz டைப் செய்து ஸ்பேஸ் பார் அழுத்தினாலும் உடனே உங்கள் இமெயில் முகவரி தானாக அமைக்கப்படும். இதில் என்ன வசதி என்றால் ஆட்டோ டெக்ஸ்ட் என்றால் உங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டு இணைக்கவா என்று கேட்கப்படும். அந்த இடைச்செருகல் இங்கே இருக்காது.

4. ஆட்டோ டெக்ஸ்ட்: வேர்ட் தொகுப்பில் பொதுவான சில சொற்றொடர்களை (நாள், தேதி போன்றவை) டைப் செய்திட முயற்சிக்கையில் சிறிய மஞ்சள் கட்டத்தில் முழுமையாக அந்த டெக்ஸ்ட் காட்டப்படும். உடனே என்டர் அல்லது எப்3 தட்டினால் அந்த டெக்ஸ்ட் அமைக்கப்படும். இதனைத்தான் ஆட்டோ டெக்ஸ்ட் என அழைக்கிறோம். வேர்ட் தொகுப்புடனே வரும் டெக்ஸ்ட் என்ட்ரிகளுடன் நாமாகவும் நமக்குத் தேவையானதை அமைக்கலாம். அமைக்க வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் வேர்ட் டாகுமெண்ட் பைலில் டைப் செய்திடவும். இது பாரா மார்க்கர்கள் அடங்கிய ஒரு முழு பாராவாகக் கூட இருக்கலாம். இதில் ஸ்பெஷல் கேரக்டர்கள் கூட இருக்கலாம். தினந்தோறும் கடிதங்களை குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புபவர்கள் அவர்களின் முகவரிகளை டைப் செய்து ஆட்டோ டெக்ஸ்ட்டில் போட்டு வைக்கலாம். இங்கு எடுத்துக் காட்டாக அதனையே காணலாம்.

ஒருவரின் முகவரியை டைப் செய்து பின் அதனை செலக்ட் செய்து கொள்ளவும். அதன் பின் இன்ஸெர்ட் மெனு சென்று அங்கே ஆட்டோ டெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் நியூ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே நீங்கள் அமைக்க இருக்கும் ஆட்டோ டெக்ஸ்ட்டுக்கு வேர்ட் தொகுப்பு ஒரு பெயரைத் தரும். அல்லது நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெயரை குறைந்தது ஐந்து கேரக்டர்கள் வரும் வகையில் அமைக்க வேண்டும். பின் ஓகே கிளிக் செய்துவிட்டால் எந்த பெயரை நீங்கள் அமைத்தீர்களோ அதனை டைப் செய்திடத் தொடங்குகையில் நான்கு கேரக்டர்கள் வந்தவுடன் அதனுடன் ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரி ஒத்துப் போனால் வேர்ட் ஒரு சிறிய கட்டத்தில் டெக்ஸ்ட்டை காட்டும். அது வேண்டும் என்றால் உடனே எப்3 அல்லது என்டர் பட்டனைத் தட்ட வேண்டும். நீங்கள் அமைத்தது மற்றும் அதற்கெனக் கொடுத்த பெயர் மறந்து போய்விட்டால் Insert, AutoText, AutoText எனச் சென்று அங்கு கிடைக்கும் பட்டியலில் சுருக்குப் பெயர்களையும் அதற்கான டெக்ஸ்ட்களையும் காணலாம். இந்த பட்டியல் மூலம் தேவையற்ற என்ட்ரிகளை நீக்கலாம். ஏற்கனவே அமைத்த டெக்ஸ்ட்களை எடிட் செய்திடலாம்.

5.பைல் மெனுவில் ஒன்பது பைல்: வேர்ட் தொகுப்பில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்கள் File மெனுவினைக் கிளிக் செய்தவுடன் கிடைக்கும். அடிப்படையில் இதில் நான்கு பைல்கள் காட்டப்படும். நீங்கள் திறந்து பயன்படுத்த விரும்பும் பைல் எந்த எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த எண்ணை அழுத்தினாலே அந்த பைல் திறக்கப்படும். மவுஸ் கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்திடத் தேவையில்லை. இதில் நான்கு பைல் என்பதனை ஒன்பது பைல் வரை காட்டும்படி செட் செய்திடலாம். இதற்கு Tools மெனுவில் Options செலக்ட் செய்து கிடைக்கும் விண்டோவில் General டேப்பினைத் தட்ட வேண்டும். அதில் Recently Used File list என்று காட்டப்பட்டு ஒரு வரி இருக்கும். அதன் முன்னால் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின் அதன் அருகே எண்ணை அமைக்க உள்ள கட்டத்தின் மேல், கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தியோ அல்லது எண்ணை டைப் செய்தோ நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் திறந்து பயன்படுத்திய பைல்களின் எண்ணிக்கையை செட் செய்திடலாம். இது வேர்டுக்கு மட்டுமின்றி அனைத்து எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளுக்கும் பொருந்தும்.

6. டேபிள் ஸ்டைல்: வேர்டில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்குகையில் அதன் ஆட்டோமேடிக் டேபிள் இரண்டு வரிசையில் ஐந்து நெட்டு வரிசையுடன் தரப்படும். இவற்றின் எண்ணிக்கையைக் கூட்டியோ குறைத்தோ அமைத்தாலும் கிடைக்கும் டேபிளின் தோற்றம் வெறும் கட்டமாக இருக்கும். இதனை அழகான ஸ்டைலில் மாற்ற வேர்ட் தொகுப்பு 45 வகையான ஸ்டைலைத் தருகிறது. ஒரு டேபிளின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்றால் அதனுள் கர்சரை அமைத்து Table
மெனுவில் கிளிக் செய்து Table AutoFormat தேர்ந்தெடுக்கவும். உடன் Table AutoFormat டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் 45 ஸ்டைலுக்கான பெரிய லிஸ்ட் கிடைக்கும். இதில் ஒவ்வொன்றின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் அதன் தோற்ற மாதிரி காட்டப்படும். பிடித்திருந்தால் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். ஸ்டைல் மாடல் பிடித்திருந்து அதிலும் சில மாற்றங்கள் செய்திட வேண்டும் என எண்னினால் modify என்பதில் கிளிக் செய்தால் எழுத்து வகை மற்றும் பார்மட்டிங் மாற்றிட விண்டோ கிடைக்கும். தேவையான மாற்றங்களுடன் புதிய ஸ்டைல் உருவாக்கி வைக்கலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் சாதாரணமாகத் தோற்றமளித்த டேபிள் படு ஸ்டைலாகக் காட்சி அளிக்கும்.

7. பாண்ட் கேஸ் மாற்ற: ஒரு சொல்லின் எழுத்துக்கள் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரியதாக என வேர்டில் மாற்றலாம். மாற்ற வேண்டிய சொல்லைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட்+எப்3 அழுத்தினால் இந்த மாற்றங்கள் அடுத்தடுத்து வரும். தேவையானது வந்தவுடன் கீகளிலிருந்து விரல்களை எடுத்துவிடலாம்.

8. வேகமாக பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லினை பார்மட் செய்திட (போல்ட், இடாலிக், அடிக்கோடு) அதனைத் தேர்ந்தெடுத்துப் பின் மெனு பாரில் உள்ள சார்ந்த ஐகானைக் கிளிக் செய்கிறோம். இந்த சிரமம் தேவையில்லை. எந்த சொல்லை பார்மட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு ப் பின் தேவையான ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதனால் ஷிப்ட் அழுத்தி கர்சரை நகர்த்தி சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலையும் நேரமும் மிச்சமாகிறது.

9. டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க இன்னொரு வழி: டாகுமெண்ட்டில் சில நேரங்களில் வரிகள் ஓரமாக ஏதேனும் தேவைப்படாத குறீயீடுகள் அமைந்திருக்கும். அல்லது டாகுமெண்ட்டில் நீளவாக்கில் தேவையற்ற டேட்டாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை நீக்க இவற்றை ஒவ்வொன்றாகச் சென்று டெலீட் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. ஆல்ட் கீயை அழுத்தியவாறு நெட்டு வாக்கில் இந்த கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து பின் வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் என்ன என்ன செய்கிறோமோ அனைத்தையும் மேற்கொள்ளலாம்.

10. ஆட்டோ சேவ்: ஒரு சிலர் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும் அடிக்கடி கண்ட்ரோல் +எஸ் அழுத்தி பைலை சேவ் செய்து கொண்டிருப்பார்கள். சிலர் முற்றிலும் மறந்துவிடுவார்கள். இடையே ஏதேனும் காரணத்தினால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் செய்த வேலை எல்லாம் போய்விடும். இது போன்றவர்களுக்காகவே வேர்ட் சில தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. வேர்ட் தானாகவே நீங்கள் தயார் செய்து கொண்டிருக்கும் டாகுமெண்ட்டை நீங்கள் செட் செய்திடும் கால அளவில் சேவ் செய்திடும். இதற்கு Tools>Options சென்று பின் கிடைக்கும் விண்டோவில் Save டேப் கிளிக் செய்திடவும். இதில் Save Auto recover info every என்று இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் கால அளவை நிமிடங்களில் செட் செய்திடலாம். இதனால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனாலும் பைல் மீட்கப்பட்டு கிடைக்கும்.

எபிக்

பெங்களூரு : மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில்,மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. ‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இது சர்வதேச அளவில், முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப, தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர், 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


Download Browser from http://www.epicbrowser.com/ website