Thursday, November 25, 2010
பிராசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை.
கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.
1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.
1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.
1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.
1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.
1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.
1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.
1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.
1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.
1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.
2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.
2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.
2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.
2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.
2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.
2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.
2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.
2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.
2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.
No Response to "பிராசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை."
Leave A Reply