Thursday, December 9, 2010

உலகின் முதல் இணைய தளம்

Posted on 2:55:00 PM by Sivaguru Sivasithan

வலையுலக பிதாமகன் என அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீ(Tim Berners Lee) 1990 ஆம் ஆண்டு CERN இல் (ஐரோப்பிய அணுசக்தி ஆய்வு கழகத்தில்) ஆய்வு செய்து கொண்டிருந்த போது Hypertext எனும் தொடர்ச்சியாக எழுத்து வடிவங்களை இணைக்கும் கருதுகோள் மூலம் சிறு கணினியையும் இணையத்தையும் இணைத்து உலகின் முதல் இணைய தளத்தை உருவாக்கினார்.

முதலில் CERN க்காக ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த இணைய தளம் மற்றும் இணைய பக்கங்கள் உபயோகிக்கப்பட்டன.பின்னர் 1992 ஆம் ஆண்டு உலகின் மற்ற ஆய்வு கூடங்களில் கணினி வழங்கிகள் வந்த பிறகு இணையம் உலகில் பரவ ஆரம்பித்தது.

World's First Web site

1990 இல் டிம் பெர்னர்ஸ் பின்னிய அந்த இணைய தளத்தின் உண்மையான பக்கம் தற்போது இல்லை எனினும் 1992இல் டிம் பெர்னர் அந்த தளத்தின் ஒரு பக்கத்தின் நகல் எடுத்து World wide web Consortium தளத்தில் வைத்துள்ளார்.

Web page of World's first Web site


உலகின் முதல் இணையதளத்திற்காக டிம் பெர்னர்ஸ் உபயோகித்த கணினி மற்றும் வழங்கி இங்கே.
தற்போது எளிமையாக தெரியும் அந்த இணைய பக்கத்தில் ஆரம்பித்து இன்று உலகத்தையே புரட்டி போட்டு விட்டது உலகளாவிய இணைய வலை.இணைய வலையை கண்டுபிடித்ததற்காக பல்வேறு விருதுகள் பெற்ற டிம் பெர்னர்ஸ் உலகின் வாழும் அறிவுஜீவிகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்து 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து knight பட்டம் பெற்றார்.

முன்னொரு காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக Global village பின் Global Hut என்ற பின்னர் Global Desktop என்றாகி தற்போது Global Palm என செல் பேசிகளிலும் இணைய பக்கங்கள் உள்நுழைந்து உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.சென்ற ஜூன் மாத கணக்குப்படி உலகின் மொத்த இணைய தளங்களின் எண்ணிக்கை 17,23,38,726. சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் இணைய தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. டிம் பெர்னர்ஸ் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இணைய தொழில் நுட்பங்களையும் வளர்ச்சியையும் பார்த்து தினம் தினம் ஆச்சர்யப்பட்டு கொண்டிருப்பார்.

No Response to "உலகின் முதல் இணைய தளம்"

Leave A Reply